முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாளான இன்று அக்கட்சியினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் முர்மு முதலமைச்சருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில்,”இன்னும் அதிக காலம் தேசத்திற்கு அர்ப்பணிப்பான சேவையைத் தொடரவும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர் இன்று அனுப்பிய வாழ்த்துச்செய்தியில், “ உங்களின் பிறந்த நாளான இன்று இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு அர்ப்பணிப்பான சேவையைச் செய்யவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நீண்ட ஆயுள் உண்டாக கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.