மறைக்கப்பட்ட அலாங்கர விளக்கு 
செய்திகள்

பிரதமர் மோடி வருகை: மசூதி தார்ப்பாய் கொண்டு மறைப்பு… வலுக்கும் எதிர்ப்பு!

Staff Writer

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ராமேஸ்வரம் பாம்பனில் உள்ள பள்ளி வாசலின் அலங்கார விளக்கை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 6ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகைக்காக பல்வேறு பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் அலங்கார விளக்கை தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மசூதியில் முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கலங்கரை விளக்கம் போல் தோற்றம் அளிக்கிறது. இது படகு, கப்பல் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.