துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
செய்திகள்

தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பாரா முதல்வர்? - உதயநிதி பதில்!

Staff Writer

தமிழகம் வரும் பிரதமர் மோடியை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

வருகிற 6ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடியை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகிறார், அவரை முதலமைச்சர் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி, “முதலமைச்சருக்கு வேறு அலுவல் பணிகள் உள்ளதால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார்.”என்றார்.