கனமழை எச்சரிக்கை 
செய்திகள்

மழை அப்டேட்: 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

Staff Writer

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் இடி மின்னலுடன், மணிக்கு 50 கிமீ வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கர்நாடகா, கேரளாவில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை மட்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.