மாஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி 
செய்திகள்

‘தெலைத்துவிடுவேன்’ – மாஃபா பாண்டியராஜனை மிரட்டிய ராஜேந்திர பாலாஜி

Staff Writer

மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன் என்று பகிரங்கமாக ராஜேந்திர பாலாஜி மிரட்டி இருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக பாண்டியராஜன் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் சிவகாசியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:

நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? அதிமுகவில் தான் ஒரு குறுநில மன்னர்தான். அதிமுகவில் திமுககாரருக்கு நான் குறுநில மன்னன்தான்.

எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாஃபா பாண்டியராஜன்? வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன். அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து இபிஎஸ்சுக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன்; உன்னால் முடியுமா? மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்” என்று கூறினார்.