பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் முத்தியுள்ள நிலையில், இளைஞரணி சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் முகுந்தன்.
கடந்த டிசம்பர் மாதம் பாமக சிறப்பு பொதுக்குழுவில், ராமதாஸ் மகள் வழிப் பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. இதைத் தொடர்ந்து அப்பா – மகன் இருவருக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்து வந்தது. இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அன்புமணிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பாமக இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். ராமதாஸ் அவர்கள் எனது குலதெய்வம். அன்புமணிதான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் கட்சி பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்”