ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா 
செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு!

Staff Writer

ரெப்போ வட்டி 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 6.25 சதவீததில் இருந்து 25 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்து 6 சதவீதமாகக் ரிசர்வ் வங்கி குறைத்தது.

தற்போது 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளதாக பொருளாதாராத நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.