ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கம் 
செய்திகள்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்!

Staff Writer

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ராய்ட்டர்ஸ் நிறுவனம் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான், ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், அதனை மறுத்த மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ராய்ட்டர்ஸ் உள்பட பல்வேறு எக்ஸ் கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் செயலி நிறுவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், அப்போது ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடக்கப்படவில்லை. அப்போதைய கோரிக்கையின் காரணமாக, இப்போது முடக்கப்பட்டிருக்கலாம்.

எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதனை சரிசெய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.