தவெக தலைவர் விஜய், போராடிவரும் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களை பனையூர் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், 11ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன