கே2-18பி கிரகம் 
செய்திகள்

அந்த கிரகத்தில் அயலான்கள்?- ரகசியம் உடைத்த விஞ்ஞானிகள்!

Staff Writer

பூமியில் இருந்து 124 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கே2-18பி எனப் பெயரிடப்பட்ட அக்கிரகத்தின் வாயுமண்டலத்தில் டை மெத்தில் சல்பைடு, டைமெத்தில் டைசல்பைடு ஆகிய வாயுக்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். கடல்வாழ் நுண்ணுயிர்களால் மட்டுமே இந்த வாயுக்கள் உருவாக்கப்படக் கூடியவை என்பதால் அந்த கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் விண் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதைக் கண்டறிந்துள்ளனர். இந்த கே2-18பி கிரகம் பூமியை விட 8.6 மடங்கு பெரியது.

இந்த ஆய்வு Astrophysical journal letters என்ற சஞ்சிகையில் வெளியாகி உள்ளது.