மாவை சேனாதிராஜா  
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்!

Staff Writer

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா (82) நேற்று காலமானார்

சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர் கொண்ட மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் சேர்ந்து, 1961இல் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலகட்டத்தில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு ஏழாண்டுகள் சிறையில் இருந்தார்.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந் சேனாதிராஜா, அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். பின்னர், 2000, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

சேனாதிராஜா, 2014ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சேனாதிராஜா தனது 82வது வயதில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.