எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள கில்லர் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அண்மைக் காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 'கில்லர்' பட பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாக எஸ்.ஜே. சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்பே ஆருயிரே படத்துக்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.