விராட் கோடி விக்கெட்டை வீழ்த்திய போலண்ட்  
விளையாட்டு

2ஆவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள்… ஸ்கோர் 128/5

Staff Writer

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய 180 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் சதத்தால் 337 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், வழக்கம் போல் முதல் 5 பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஜெய்ஸ்வால் 24 ரன்கள், கேஎல் ராகுல் 7 ரன்கள், சுப்மன் கில் 28 ரன்கள் விராட் கோலி 11 ரன்கள் மற்றும் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

தற்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட், நித்தீஷ்குமார் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.