ஆனந்த்குமார் வேல்குமார் 
விளையாட்டு

ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: 2ஆவது முறையாக தங்கம் வென்ற தமிழர்!

Staff Writer

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 42 கி.மீ. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்று ஸ்கேட்டிங்கில் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்பு, 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் ஸ்கேட்டிங் போட்டியில் சர்வதேச அளவில் இரு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 42. கி.மீ. மாரத்தான் ஸ்டேட்டிங்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதமூலம், ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதே சாம்பியன்ஷிப் போட்டியில், 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.