அர்னவ் பபார்கர்  
விளையாட்டு

விம்பிள்டன்: 36 ஆண்டுகளுக்குப் பின் காலிறுதியில் இந்தியா... அர்னவ் அதிரடி ஆட்டம்!

Staff Writer

விம்பிள்டன் ஜூனியர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் 18 வயதான அர்னவ் பபார்கர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பானின் ரியோ தபாடாவை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெறும் 52 நிமிடங்களில் வீழ்த்தி, ஆண்கள் ஒற்றையர் ஜூனியர் பிரிவின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம், கடந்த 1990-ஆம் ஆண்டு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார்.

விம்பிள்டன் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு, 36 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அர்னவ் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், உலக ஜூனியர் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் கீட்டன் ஹான்ஸை நேர்செட் கணக்கில் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

தற்போது தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து சிறப்பான ஃபார்மில் உள்ள அர்னவ், இந்திய டென்னிஸின் அடுத்த நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram