ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்காக நடத்தப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் 43 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 469 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஒலிம்பியன் இளவேனில் வாலறிவன் 10 மீ ஏா் ரைஃபிள் தனிநபா் பிரிவில் 252.4 புள்ளிகளை ஈட்டி வெள்ளி வென்றாா்.
மகளிா் 10 மீ ஏா் ரைஃபிள் இறுதிப்போட்டியில் இளவேனில், சோனம் உத்தம், விதா்ஷா வினோத் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் ஹிமான்சு தில்லான், பார்த் மானே, ருத்ராக்ஷ் பாட்டீல் ஆகிய மூவர் இடம்பெற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஹிமான்சு தில்லான் வெள்ளி, ருத்ராக்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
ஹாக்கி:
ஆடவா் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
மகளிா் ஹாக்கி பிரிவில் இந்திய அணி 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸ் ஆடவா் பிரிவில் குரூப் எஃப் பிரிவில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில், இந்தோனேசியாவை வீழ்த்திப் போட்டியை வென்றுள்ளது.
இந்திய மகளிர் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி, போட்டியை வென்றனா்.