உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தில் பிரேசில், மொரோக்காவுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் மொரோக்கோ ஒரு கோல் போட்டு பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி சும்மா இருக்குமா? அதன் வீரர் வினிசியஸ் ஜூனியர், உடனே ஒரு கோல் அடித்து சமன் செய்தார். ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. மொரோக்கோ, 2022 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய அணி என்பது நினைவிருக்கலாம்.
குரூப் பி-யில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் கத்தாரும் சுவிசர்லாந்தும் மோதின. இதுவும் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. வலிமையான அணியான சுவிட்சர்லாந்தை இரண்டாம் பாதியில் கோல் போட்டு கத்தார் ட்ரா செய்தது. உலகக் கோப்பையில் கத்தார் அணி புள்ளி ஒன்றைப் பெறுவது இதுவே முதல் முறை.
ஸ்காட்லாந்து அணி இதுவரை கடந்த 36 ஆண்டுகளில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதே இல்லை. குரூப் சி ஆட்டமொன்றில் ஹைதி அணிக்கு எதிராக 1-0 என வெற்றி பெற்று அந்த குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளது. ஸ்காட்லாந்துக்கு இது நல்ல தொடக்கம்.
குரூப் டியில் இன்று நடந்த இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலியா, எதிர்த்து ஆடிய பலம் வாய்ந்த துருக்கி அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.