தமிழக வீராங்கனை பரணிகா - முதல்வர் விஜய் 
விளையாட்டு

வெள்ளி, வெண்கலம் வென்ற ’தமிழக தங்கங்களுக்கு’ முதல்வர் அறிவித்த ஊக்கப்பரிசு!

Staff Writer

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பதக்கங்களை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலன் செந்தில்குமார் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.30 இலட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ், வில் டி.கே ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனின் சாதனையைப் பராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram