ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்குகிறார் முதல்வர் விஜய்  
விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம்!

Staff Writer

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக பளு தூக்கும் வீரருக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான 65 கிலோ பளு தூக்கும் போட்டியில், தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவரை வாழ்த்தியுள்ள முதல்வர் விஜய், "வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 30 லட்சம் அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்." என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியும் முத்துப்பாண்டியைப் பாராட்டியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram