உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த காலிறுதிச் சுற்றுகள் நிறைவடைந்தன.
கடைசி இரண்டு காலிறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து, அர்ஜெண்டினா அணிகள் அரையிறுதிக்கான தகுதியைப் பெற்றுள்ளன.
இங்கிலாந்து, நார்வே அணிகளுக்கு இடையேயான போட்டியில், நார்வே அணியை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதிச் சுற்றில், அர்ஜெண்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கான தகுதியைப் பெற்றது.
இதன் மூலம் உலகக் கோப்பை 2026 அரையிறுதியில் மோதும் நான்கு அணிகள் உறுதியாகியுள்ளன.
ஓர் அரையிறுதியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகளும், இன்னொரு போட்டியில் இங்கிலாந்து - அர்ஜெண்டினா அணிகளும் மோதுகின்றன.
உலகக் கோப்பையை வெல்லும் அணி எதுவாக இருக்கும் எனும் ஆவலுடன், இறுதிச்சுற்றை எதிர்நோக்கி கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.