போட்டியை ஸ்பெயின் அணி வென்றது 
விளையாட்டு

16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின்!

Staff Writer

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றுள்ளது.

அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில், ஸ்பெயின் அணி வீழ்த்தியது. இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. மூன்று முறை கோப்பையை வென்ற அர்ஜெண்டினா, ஒரு முறை கோப்பை வென்ற ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்புடன் விளையாடின. போட்டியின் 90ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 106ஆவது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் வீரர், பெர்ரான் டோரஸ் கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலைக்குக் கொண்டுவந்தார். அர்ஜெண்டினா அணி சமநிலைக்காகப் போராடியபோதும், கோல் ஏதும் அடிக்கமுடியாமல் திணறியது.

போட்டியின் இறுதியில் ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றி, நடப்பு ஆண்டுக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram