உலகக்கோப்பை கால்பந்து போட்டி 
விளையாட்டு

ஃபிஃபா-வில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த 4 வீரர்கள்!

Staff Writer

ஃபிஃபா எனப்படும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நால்வர் பங்கேற்கின்றனர். அவர்களில் தமிழ் வம்சாவளியைச் சார்ந்த இருவர் கால் பதிக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்கிறன. 16 நகரங்களில், 104 போட்டிகள் நடைபெறும் இப்போட்டியில், 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தாஹ்சின் ஜம்ஷித் கத்தார் அணியிலும், பஞ்சாப்பைச் சேர்ந்த சர்தீப் சிங் நியூசிலாந்து அணியிலும் போட்டியிடுகின்றனர்.

ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலியா அணியிலும், சாமுவேல் முத்துசாமி காங்கோ அணியிலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் நிஷான் வேலுப்பிள்ளை மெல்பர்ன் விங்கர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் தந்தை மலேசியத் தமிழர்; தாய் ஆங்கிலோ-இந்தியர்.

காங்கோ அணியில் விளையாடும் நிஷான் வேலுப்பிள்ளை 2019-ல் காங்கோ தேசிய அணிக்காக அறிமுகமானவர். இவரின் தந்தை தமிழர் வம்சாவளியைக் கொண்ட இந்தோ-குவாடலூபியன்; தாய் காங்கோவைச் சேர்ந்தவர்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றாலும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த 4 வீரர்கள் போட்டியிடுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.