ஐ.சி.சி. லோகோ 
விளையாட்டு

ஒரு நாள் உலகக்கோப்பை 2027 போட்டிகள் நடைபெறும் இடங்கள் - ஐ.சி.சி. அறிவிப்பு!

Staff Writer

ஒரு நாள் உலகக்கோப்பை 2027 நடைபெறும் இடங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

கடந்த 2023-ல் இந்தியாவில், இந்த ஒரு நாள் உலகக்கோப்பை நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.

நடப்பு ஆண்டிற்கான ஒரு நாள் உலகக்கோப்பை 2027 போட்டியில், 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவில் 8 இடங்கள், ஜிம்பாப்வேவில் 3 இடங்கள், நமீபியாவில் 1 என மொத்தம் 12 இடங்களில் நடைபெறவிருக்கிறன.

ஆப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில்தான் ஒரு நாள் உலகக்கோப்பை 2027 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 2027 வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram