கிரிக்கெட் வீரர் அஸ்வின்  
விளையாட்டு

‘சும்மா இருக்க போறேன்…அதான் கஷ்டமே’ - அஸ்வின் ஒப்பன் டாக்

Staff Writer

‘இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம்' என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் சென்னை திரும்பினார் அஸ்வின். அவரை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. மூன்றாவது டெஸ்ட்டின் நான்காம் நாளில் ஓய்வு முடிவை எடுத்தேன்.

அடுத்து ஏதும் திட்டமில்லை. அடுத்த பயணத்தை இனிமேல் தான் தொடங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன். சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன். எனக்கு துளியும் கூட வருத்தமே இல்லை.” என்றார்.