ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
படகுப்போட்டி :
ஆடவர் ஸ்கிஃப் ஓபனிங் ரேஸ் -9இல், பிரின்ஸ் குரிசின்கல் நோபல், மனு ஃபிரான்சிஸ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
மகளிா் ஸ்கிஃப் ஓபனிங் ரேஸ் 9-இல், ஹா்ஷிதா தோமா், ஷீத்தல் வா்மா இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.
மல்யுத்தம்:
ஆடவர் 97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் நிதேஷ் சிவச் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் சுஜித் கல்கல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வில்வித்தை:
ஆடவர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் கணேஷ் மணிரத்னம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்குவாஷ்:
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளன.
கிரிக்கெட்:
ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில், இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
குத்துச்சண்டை:
குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா இந்தியாவுக்கு 13ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவர் குத்துச்சண்டையில் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அங்குஷ் பங்கால் இந்தியாவுக்கு 15ஆவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
பதக்கப் பட்டியலில் இந்திய அணி:
இதுவரை இந்தியா 15 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 75 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.