இந்திய ஆடவர் கபடி அணி வெற்றி 
விளையாட்டு

பின் தங்கி இருந்தாலும் சமாளித்து அடித்து ஆடி கபடியில் தங்கம் வென்ற ஆடவர் அணி!

Staff Writer

ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஆடவர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெறும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் 43 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 469 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

இதில் இந்திய ஆடவர் கபடி அணி 40 – 34 புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி, தங்கம் வென்றுள்ளது. இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை நடந்த பத்து கபடிப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி பெறும் ஒன்பதாவது தங்கம் ஆகும்.

போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணி சற்று பின்தங்கி இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலைமையை சுதாரித்துக்கொண்ட இந்திய அணி, முன்னிலைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது.

முதல் பாதி ஆட்டத்தில், இந்திய அணி 1 புள்ளி பின்தங்கியிருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, போட்டி முடிய 8 நிமிடங்கள் இருந்தபோது 7 புள்ளிகள் முன்னிலைக்குச் சென்றுவிட்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram