இந்திய தடகள வீரர் சவான் பர்வால் 
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்!

Staff Writer

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று குவித்துவருகின்றனர்.

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்காக நடத்தப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் 43 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 469 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துடுப்புப் படகு போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளது. இந்தியாவின் சல்மான், சத்நாம் ஜோடி 6 நிமிடங்கள் 13 விநாடிகளில் இலக்கைக் கடந்து மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற அனந்த்ஜீத் சிங் நருகா, பரினாஸ் தலிவால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா சார்பில் பங்கேற்ற மாசெட்டிரா பூவம்மா, தெக்கினாலில் மனு, விஷால் தென்னரசு, ராம்ராஜ் வைத்யா ஆகியோர் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில், இந்தியாவின் கமல்ஜீத், சுருச்சி சிங் இணை 484.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

ஆடவருக்கான 50 மீ ரைபிள் போட்டியில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட ருத்ராங்ஷ் பாட்டில், ஐஸ்வரி பிரதாப் தோமர், நிரஜ் குமார் கூட்டணி பெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது.

மகளிர் குண்டு எறிதலில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கெளர்  வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கலப்பு இரட்டையர்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்ற மனுஷ் ஷா, தியா சிதலே வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இந்திய வீரர் குல்வீர் சிங் பங்கேற்ற 10,000 மீட்டர் போட்டியில், 28 நிமிடங்கள் 29.38 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

இன்று நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் திலோத்தமா சென், விதர்சா வினோத், ஆஷி செளக்சி ஆகியோர் அடங்கிய அணி 1763 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.   

இந்திய தடகள வீரர் சவான் பர்வால் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் 37 நொடிகளில் இலக்கை கடந்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram