தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணி 
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தல்!

Staff Writer

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று, இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளது.

மகளிர் கபடி இறுதிப்போட்டி, இந்தியா – ஈரானுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை ஐந்து முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணி, நான்காவது முறையாக தங்கம் வென்றுள்ளது.

நடப்பு ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை, இந்திய அணி 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தமாக 27 பதக்கங்களை வென்றுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram