இன்னும் எத்தனை பர்னிச்சர்களை உடைக்கப்போகிறாரோ இந்த 15 வயது பாலகன் சூர்யவன்ஷி?
50 ஓவர்கள் கொண்ட போட்டியில் இதுவரை நடக்காத சாதனையாக ஒரே போட்டியில் 28 சிக்சர்களை விளாசி 2018-இல் மேற்கு ஆஸ்திரேலிய வீரர் ஆர்சி ஷார்ட் என்பவர் செய்த சாதனையை முறியடித்திருக்கிறார். 50 ஓவர் போட்டி மட்டுமல்ல, எல்லா விதமான வடிவங்களிலான கிரிக்கெட் ஆட்டங்களிலும் ஒரே ஆட்டத்தில் 28 சிக்ஸர் அடித்த வீரர் யாருமே இல்லை.
இன்று யு ஏ இக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்துகளில் 204 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தபோது அதிவேக சதம், 150, இரட்டை சதம் ஆகிய உலக சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.
இதற்கு முன்னால் இதுபோன்ற லிஸ்ட் ஏ ஆட்டத்தில் எந்த இந்திய வீரரும் 20 சிக்ஸருக்கு மேல் விளாசியது இல்லை. எந்த அணியுமே கூட 28 சிக்ஸர்கள் அடித்தது இல்லை. இந்த இரண்டையுமே தாண்டிச் சென்றார் சூர்வவன்ஷி.
யுஏஇ அணி சொத்தை அணி என்று யாரும் சொல்லலாம். ஆனால் லிஸ்ட் ஏ என்றால் லிஸ்ட் ஏ ஆட்டம்தான். அதில் சாதனை என்றால் சாதனை தான்.
இப்போதைக்கு டி20 ஆட்டக்காரராகத்தான் இந்திய அணியில் சூர்ய வன்ஷி ஆடிவருகிறார். விரைவில் ஒருநாள் போட்டி அணியிலும் அவரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
யுஏஇ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் என்ன ஆச்சு?
அவர்கள் அடித்த 249 ரன்களை 14.5 ஓவர்களில் இந்திய அணி துரத்திப் பிடித்துவிட்டது! இருக்காதா பின்னே பேய் போல் ஆடுகிறாரே சூர்ய வன்ஷி