அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேசியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
அமெரிக்காவில், உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியா வீராங்கனை ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு களம் இறங்கிய, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இதனால், இந்தோனேசியா வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற, கொனேரு ஹம்பியை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.