மோஹித் ஜங்க்ரா 
விளையாட்டு

அடேங்கப்பா... ஒரே இன்னிங்ஸில் இரண்டு ஹாட்ரிக்!

Staff Writer

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அசாம் - சர்வீசஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நேற்று அசாமில் உள்ள தின்சுகியா நகரில் தொடங்கியது.

சர்வீசஸ் அணி சார்பில் மோஹித் ஜங்க்ரா, அர்ஜுன் சர்மா ஆகியோர் ஒரே இன்னிங்சில் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர்.

அர்ஜுன் சர்மா வீசிய 12ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்த பந்துகளில் சுமித் காடிகோன்கர், சிப்சங்கர் ராய் ஆகியோரை வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அர்ஜுன் சர்மா 6.1 ஓவர்களை வீசி 46 ரன்களை விட்டுக்கொடுத்து ஹாட்ரிக்குடன் மொத்தம் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

மோஹித் ஜங்க்ரா 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் பிரத்யுன் சைகியாவை அவுட்டாக்கினார். தொடர்ந்து 17ஆவது ஓவரை வீசிய ஜங்க்ரா முதல் 2 பந்துகளில் முக்தார் உசேன் பார்கப் லக்கர் ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய அவர், 2 மெய்டன்களுடன் 5 ரன்களை விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றினார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இரு பந்து வீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

இதன் மூலம் இந்த ஆட்டம் 90 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதுவும் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாகும்.