இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான அஸ்வின், பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
2011ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உட்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார்.
106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்துவிதமான போட்டிகளில் இதுவரை 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேசப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஓய்வு குறித்த அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.