ஸ்பெயின் அணி வீரர் 
விளையாட்டு

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள்!

Staff Writer

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல், குரோஷியா அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இதனால் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு போர்ச்சுகல் அணி முன்னேறியது.

குரோஷியாவின் இவான் பெரிசிச் முதலில் கோல் அடித்த நிலையில், 68-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து 94ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி கோல் அடித்து, போட்டியை வென்றது. இதன் மூலம் போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

மற்றொரு நாக் அவுட் போட்டியில், ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மிகேல் ஒயர்சபால் இரண்டு கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா அணிகள் மோதின. இதில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் சுவிட்சர்லாந்து அணி போட்டியை வென்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram