உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் 'ஹெச்' பிரிவில் உள்ள அணிகளுக்கானப் போட்டியில் சவூதி அரேபியா, ஸ்பெயின் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் 4-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை, ஸ்பெயின் அணி வீழ்த்தி வென்றுள்ளது.
இதன் மூலம் ஸ்பெயின் அணி 4 புள்ளிகள் பெற்று 'ஹெச்' பிரிவு அணிகளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
குரூப் 'ஹெச்' பிரிவில் உள்ள உருகுவே, கேப் வெர்டே அணிகளுக்கான அணிகளுக்கான போட்டியில் இரு அணிகளும் 2-2 புள்ளிகள் பெற்றன. இதனால், இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
குரூப் 'ஜி' பிரிவில் நியூசிலாந்து , எகிப்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் எகிப்து அணி 3 -1 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து அணியை வென்றது.
குரூப் 'ஜி' போட்டியில் பெல்ஜியம், ஈரான் அணிகள் மோதின. இந்தப் போட்டி, இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காததால் டிராவில் முடிந்தது.