விளையாட்டு

நிஷான் வேலுப்பிள்ளை…. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும் தமிழன்!

Staff Writer

தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி 2026 -இல் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கி ஆடி இருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த பூர்வீகத் தமிழரான நிஷான் வேலுப்பிள்ளை.

துருக்கிக்கு எதிராக இன்று (ஜூன் 14) நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-0  என்ற கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் நிஷான் களமிறக்கப்பட்டு ஆடினார். இது அவரது முதல் உலகக் கோப்பை ஆட்டம் ஆகும்.

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் நிஷான். 25 வயதான இவர் அந்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் கால்பந்து வீரர் ஆவார். இவரது தந்தை மலேசியாவுக்கு இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர். தாயார் ஆங்கிலோ இந்தியர்.

எட்டு சர்வதேசப் போட்டிகளில் ஆடி மூன்று கோல்கள் அடித்துள்ளார் வேலுப்பிள்ளை.

ஆக, இனி ஆஸ்திரேலியா ஆடும் ஆட்டங்களை தவறாமல் கவனியுங்கோ மக்களே...