வெள்ளிப் பதக்கம் வென்ற தன்வி பத்ரி 
விளையாட்டு

இளைஞர் ஒலிம்பிக்- வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை!

Staff Writer

இளைஞர் ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் தன்வி பத்ரி.

ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் யூத் ஒலிம்பிக்ஸ் 2026 நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பாக 15 வயது வீராங்கணை தன்வி பத்ரி பங்கேற்றார்.

முதலில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு, இவருக்கு வலுவாக இருந்தபோதிலும், 6 புள்ளிகள் வித்தியாசத்தில் அதைத் தவறவிட்டார்.

ஒடிசாவைச் சேர்ந்த தன்வி பத்ரி, சீனப் பயிற்சியாளர் ஜியாங் யோங் யீயிடம் பயிற்சி பெற்றுள்ளார். இவர் 2017 முதல் 2020 வரை சீனாவில் நடைப்பெற்ற போட்டிகளில், ஒன்பது பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இதுவரை, இந்தியா சார்பாக ஆடவர் பிரிவில் விளையாடிய பிரணாப்(2010), லக்சயா சென்(2018) ஆகிய இருவர் மட்டுமே பதக்கம் வென்றுள்ள நிலையில், மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாக தன்வி பத்ரி சாதனை படைத்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram