விளையாட்டு

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Staff Writer

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

முதல் போட்டி பெர்த்தில் தொடங்கியது. 

இங்கிலாந்து அணியின் திறன் இந்தப் போட்டியில் எடுபடவில்லை. ஒரு நாளிலேயே சுருண்டது. 

ஆஸ்திரேலிய அணி களமிறங்கி ஆரம்பம் முதலே அசத்தலாக ஆட்டம் காண்பித்தது. 

அந்த அணியின் டிராவிஸ் ஹெட் சதம் எடுத்ததுடன் மொத்தம் 123 ஓட்டங்களையும் லபுசேன் 53 ஓட்டங்களையும் எடுத்தனர். 

இதிலேயே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

நடப்பு நிலைமையில், ஐந்து போட்டிகளில் 1--0 எனும் கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.