ரோகித் யாதவ் 
விளையாட்டு

ரோகித் யாதவ் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம்! இதே தூரத்தை தொடர்வாரா?

Staff Writer

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் ரோகித் யாதவ் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இவர் 87.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் இதுதான் அதிக அளவு. சாதனையாளரான நீரஜ் சோப்ராகூட 85 மீட்டர்தான் தற்போதைய காலகட்டத்தில் எறிகிறார்.

இது ரோகித் யாதவின் தனிப்பட்ட சிறந்த சாதனையாக மட்டுமல்லாமல், 2026 சீசனில் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த ஈட்டி எறிதல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரோகித் யாதவ் கூறியதாவது:

"நான் 2022ஆம் ஆண்டு மூன்று முறை 82 மீட்டரைத் தாண்டி ஈட்டி எறிந்துள்ளேன். 2023ஆம் ஆண்டு மூன்று முறை என் இலக்கு 83 மீட்டரைத் தாண்டியுள்ளது.

2024ஆம் ஆண்டு எனக்கு காயம் ஏற்பட்டதால், எந்த போட்டியிலும் நான் கலந்துகொள்ளவில்லை. மீண்டும் தற்போது உடல்தேறி வந்தவுடன் இந்த இலக்கை அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது." என்று ரோகித் யாதவ் குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதியை இவர் உறுதி செய்துள்ளார்.

இந்த சாதனையின் மூலம் உலக தரவரிசையிலும் முன்னணி இடத்திற்கு ரோகித் யாதவ் முன்னேறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram