முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் ஒதுங்கிய மியான்மர் படகு 
இலங்கை

103 பேருடன் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு!

Staff Writer

போரினால் உயிருக்கு அஞ்சியும் நல்ல வாழ்வாதாரத்துக்காகவும் இலங்கையிலிருந்து தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டுவந்தனர். ஒருவழியாக அந்த ஆபத்து குறைந்துள்ள நிலையில் இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் இன்று 103 பேருடன் வெளிநாட்டுப் படகு ஒன்று கரையொதுங்கியது. 

கரையில் குளித்துக்கொண்டிருந்தவர்களும் மீனவர்களுமாக அதைப் பார்த்ததும் முதலில் அவர்களுக்கு முதலுதவி செய்தனர். 

அந்தப் படகு மியான்மரிலிருந்து புறப்பட்டதாக அதன் உள்ளே இருந்தவர்கள் தெரிவித்தனர். 25 குழந்தைகளும் மூன்று பெண்களும் அந்தப் படகில் இருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

கைவசமிருந்த உணவுப்பொருட்களை முள்ளிவாய்க்கால் மீனவர்கள் அவர்களுக்கு வழங்கியபோதும் அது போதுமானதாக இல்லை. 

பலரும் மயங்கியநிலையில் படகில் இருந்துள்ளனர். 

தகவலறிந்து இலங்கைக் கடற்படையினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே கரைக்குக் கூட்டிவருவதைப் பற்றி யோசிக்கமுடியும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram