காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கைச் சிறையில் அடைப்பு 
இலங்கை

18 காரைக்கால் மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

Staff Writer

இலங்கையில் எல்லைமீறிச் சென்று மீன் பிடித்ததாக புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 18 பேர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். 

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்ற இவர்களை, இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து பிடித்ததாக அந்நாட்டுக் கடற்படை தெரிவித்துள்ளது. 

அவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் கடல் தொழில், நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். 

நீதிவான் கிருசாந்தன் பொன்னுதுரை அவர்கள் 18 பேரையும் வரும் 10ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.