இலங்கை நாடாளுமன்றம் 
இலங்கை

85 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது!

இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்ததால் வினை!

Staff Writer

இலங்கையின் நாடாளுமன்றத்தை அதிபர் அனுரகுமார திசநாயக்கா கலைத்ததால், 85 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கான 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்பவருக்கே ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு முறை உறுப்பினராக இருப்பவருக்கு அவரின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கும், 10 ஆண்டுகள் பதவியில் இருப்பவருக்கு ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கும் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கடந்த வாரம் கலைக்கப்பட்ட ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர் நா.ம. கலைக்கப்பட்டுள்ளதால், மொத்த 225 எம்.பி.களில், ஆளும், எதிர் கூட்டணிகளின் உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தை இழக்கின்றனர்.

இந்தியாவிலும் இப்படிக் கடைப்பிடித்தால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்... அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram