உலகச் சாதனை படைத்த காட்சி 
இலங்கை

இலங்கையில் கின்னஸ் சாதனை படைத்த பரதநாட்டியக் கலைஞர்கள்!

Staff Writer

இலங்கையின் கொழும்பு நகரில் 5,000த்திற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் இணைந்து பரதநாட்டியம் ஆடி உலகச் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை கின்னஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இலங்கை, இந்தியா, பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி, இலங்கையின் சங்கமிழ் லியா ஹாலிடேஸ் ஆகியவை இணைந்து இதை நடத்தின.

பல்வேறு நாடுகளுக்கு இடையே பகிரப்படும் கலாச்சாரத்தை முன்னெடுத்துக் காட்டும் வகையில் இச்சாதனை அமைந்துள்ளது.

5,000த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரே மாதிரியான வண்ணமயமான உடைகளை அணிந்து ஒருங்கிணைந்து நடமாடினர். இதனைத்தொடர்ந்து உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, கலைஞர்கள் சார்பாக கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். பின்பு உரையாற்றிய இவர், இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவை பலப்படுத்துவதில், கலாச்சாரத்தின் பங்கு மிகப்பெரியது என்றார்.

ஒரே இடத்தில் இத்தனை நடனக்கலைஞர்கள், ஒரே மாதிரியான நடனத்தை ஆடியது பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram