இலங்கையில் போரினால் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 
இலங்கை

இலங்கை சுதந்திர நாளைக் கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க முடிவு!

Staff Writer

இலங்கையின் 77ஆவது சுதந்திர நாள் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வருகிறது. இந்நிலையில் போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அந்த நாளைக் கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க முடிவுசெய்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, இத்தகவலைத் தெரிவித்தனர்.

அச்சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இலங்கை சுதந்திர நாளைக் கருப்பு நாளாகக் கடைப்பிடித்து தமிழ் மக்களின் வலியையும் உணர்வையும் வெளி உலகத்துக்கு மட்டுமல்ல, இலங்கை அரசாங்கத்துக்கும் எடுத்துக்கூறுவதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

இந்த எதிர்ப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.