சட்டவிரோதமான மது பான வகைகளைத் தடுப்பதற்காக இலங்கையில் வரும் ஆண்டில் புதியதாக குறைந்த விலை மதுவகை தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் மதுவகைகள் மதுக்கடைகளில் விற்கப்படுகின்றன என்றும் அவற்றை வாங்க வேண்டாம் என்றும் அந்த மதுவகைகளில் நஞ்சு கலந்திருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்றும் இலங்கை மது வரித் துறையின் ஆணையாளர் உதய குமார பெரேரா கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கைப் பணத்துக்கு இந்த ஆண்டில் 23.2 கோடி ரூபாய் மது விற்பனை மூலம் திரட்ட மது வரித் துறை இலக்கு வைத்துள்ளது. அதில் இதுவரை 21 கோடி ரூபாயை ஈட்டிவிட்டதாகவும் மீதத்தொகையை வரும் 29ஆம் தேதிக்குள் ஈட்டிவிட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.