இலங்கை கொத்து பரோட்டா 
இலங்கை

பரோட்டா விலை 10 ரூபாய் குறைப்பு... காரணம் மின் கட்டணம்!

Staff Writer

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதற்கு ஆளும் தி.மு.க. கூட்டணியின் கட்சிகளே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இதனால் பல வணிக, தொழில் கட்டணங்கள், விலைகள் உயரக்கூடும் என முக்கியமாக அரசியல் தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். 

இதற்கு நேர்மாறாக, இலங்கையில் இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடிய மின் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டுப் பயன்பாட்டு மின்சாரத்தில் 27 சதவீதமும், உணவகங்கள்- கைத்தொழில் கூடங்களுக்கு 25 சதவீதமும் மதத்தலங்களுக்கு 30 சதவீதமும் கட்டணம் குறைக்கப்படும்.  

உணவகங்களுக்கான மின் கட்டணக் குறைப்பால், பல உணவுப்பொருள்களின் விலையைக் குறைப்பதாக அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

அதன்படி, பரோட்டா, முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலையில் 10 ரூபாயும், கொத்துரொட்டி, சோற்று வறுவல், பொட்டலச் சோறு ஆகியவற்றின் விலையில் 25 ரூபாயும் குறைக்கப்படும். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram