இலங்கை பிரதமர் ஹரிணி பதவியேற்பு 
இலங்கை

இலங்கை பிரதமராக ஹரிணி அமர சூர்யா நியமனம்- நேற்று வாழ்த்திய இந்திய அதிகாரி!

Staff Writer

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவிவிலகியதை அடுத்து, அதிபர் அனுரகுமார திசநாயக்காவின் ஜேவிபி கட்சி எம்.பி. ஹரிணி அமர சூர்யா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் இடைக்காலப் பிரதமராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் அதிபராக அனுரகுமார திசநாயக்கா நேற்று பதவியேற்றதும் அந்நாட்டு பிரதமர், அமைச்சர்கள், ஆளுநர்கள் பலரும் பதவிவிலகினர்.

இதனிடையே, சில முக்கிய அதிகாரி பணியிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு விமானப்படை முன்னாள் தளபதி துய்யகொந்தா நியமிக்கப்பட்டார்.

அனுரகுமார அதிபராக ஆனதால், அவர் வகித்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணி- ஜேவிபி கட்சியின் இலட்சுமண் நிபுண ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், பிரதமர் பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹரிணி அமர சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட ஹரிணியை நேற்று இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா வாழ்த்தினார்

இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா நேற்று இவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram