இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு இடங்களுடன் பெருவெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 159 இடங்கள் கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைத்தன.
முன்னைய ஒருங்கிணைந்த ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்’ முக்கியக் கட்சியாக இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி எட்டு இடங்களைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி 5 இடங்களைப் பிடித்துள்ளது.
இராஜபக்சேவின் இலங்கை பொதுமக்கள் முன்னணி 3 இடங்களைப் பெற்றுள்ளன.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன.
முன்னாள் அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகள் உருவாக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் கட்சி, யாழ்ப்பாண சுயேச்சைக் குழு 17, சர்வஜன பலய ஆகியவை தலா ஓர் இடத்தைப் பெற்றுள்ளன.