தமிழக மீனவர்கள்  (கோப்புப் படம்)
இலங்கை

இலங்கை நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

Staff Writer

இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு அருகில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில்தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலிருந்து நேற்று 7ஆம் தேதி கடலுக்குள் சென்ற 324 படகுகளில் இரு படகுகளில் இருந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சி மடம் சகாய ஆண்ட்ரூ ஆகியோருக்குச் சொந்தமான அந்த படகுகளைக் கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர் எட்டு பேரையும் கைதுசெய்தனர்.

அவர்களை முதலில் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று, யாழ்ப்பாணம் கடல் தொழில், மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.