மாவீரர் வாரம் தொடக்கம் 
இலங்கை

இலங்கையில் மாவீரர் வாரம் தொடங்கியது!

Staff Writer

இலங்கையில் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

நவம்பர் 21ஆம் தேதி தொடங்கும் மாவீரர் வாரத்தின் கடைசி நாளான 27ஆம் தேதி மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அன்றைக்கு அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் வீடுகளிலும் ஈழத்தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் இறந்துபோன தங்கள் உறவினர்களுக்கு பொது அஞ்சலி செலுத்தல் நடைபெறும். 

மாவீரர் வாரத்தின் தொடக்கமாக, யாழ்ப்பாணம் தீவகம்- சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று ஈகைச்சுடன் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதில் கலந்துகொண்ட மக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்தினர்.