கச்சத்தீவு 
செய்திகள்

இந்தியப் பெருங்கடலே பாலைவனம் ஆகிவிடும்- இலங்கை அமைச்சர் ஓவர் பேச்சு!

Staff Writer

இலங்கை வசம்தற்போது உள்ள கச்சத்தீவில் கடந்த இரண்டு நாள்களாக அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெற்றது. அதில் தமிழக, இலங்கை மீனவர்கள், பக்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளுடன் இலங்கையின் கடல் தொழில் துறை அமைச்சர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தமிழக இழுவைப் படகு மீன்பிடியால் இலங்கையின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது; அவர்கள் இதைத் தொடர்ந்தால் இந்தியப் பெருங்கடலே பாலைவனமாக மாறிவிடும் என்று குறிப்பிட்டார். 

இராமேசுவரத்தின் அனைத்து மீனவர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் ஜேசுராஜுடன் பேசியதாகவும் இலங்கை அமைச்சர் கூறினார். 

இந்திய(தமிழக) மீனவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கவேண்டும் என்பதுதங்களின் நோக்கம் இல்லை என்றும் அவர்கள் அத்துமீறி, இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலை மீன்பிடியில் ஈடுபடுவதால்தான் இவ்வாறாக நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது என அவரிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.